பிக்பாஸ் நமீதா மாரிமுத்துவின் வழுவழுப்பான முகத்திற்கு இது தான் காரணமா? அவரே பகிர்ந்த சூப்பர் தகவல் இதோ!
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குறிப்பாக பெண்களுக்கு அழகு என்றால் எந்த அளவுக்கும் துணிந்து செயல்படுவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் நமீதா மாரிமுத்து தனது அழகின் ரகசியத்தை பற்றி ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலே சென்று இருந்தாலும் பலரின் மனதை கவர்ந்தவர் நமீதா மாரிமுத்து. இவர் திருநங்கை என்ற ஒரே காரணத்தால் மட்டும் இந்த சமுதாயத்தில் பல துன்பங்களை சந்தித்து உள்ளார்.
இதற்கிடையில் தான் இவருக்கு தனது திறமையை மக்களுக்கு எடுத்துக்காட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இவர் சினிமாவில் பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நமீதாவை பார்க்கும் பலரும் குறிப்பாக பெண்கள் அவரிடம் கேட்கும் முதல் கேள்வி சருமம் எப்படி இப்படி பளபளப்பாக இருக்கிறது?
அதற்கு அவர் ஒரு சூப்பர் டிப்ஸை பகிர்ந்துள்ளார். அதாவது நமீதா மாரிமுத்துவின் முகம் கிளாஸ் போல பளபளப்பாக இருக்க தண்ணீர் தான் காரணமாம். ஒருநாளைக்கு சரியாக 5 லிட்டர் தண்ணீர் குடிப்பாராம்.
இப்படி தவறாமல் தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் முகத்தில் அப்படி ஒரு ஜொலி ஜொலிப்பு தெரியும் என்று தெரிவித்துள்ளார். முகப்பருக்கள், ட்ரை ஸ்கின், எண்ணெய் பசை போன்ற எந்த பிரச்னையாக இருந்தாலும் சரி 5 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதும்.
பிக் பாஸ் வீட்டில் அவர் இருந்த முதல் வாரத்தில் நன்கு கவனித்து இருந்தால் தெரிந்து இருக்கும். நமீதா எப்போதுமே ஒரு வாட்டர் பாட்டலுடனே சுற்றி கொண்டிருப்பார். அதற்கு காரணம் இந்த 5 லிட்டர் தண்ணீர் தான் என்று கூறப்படுகிறது.