மழைக்கு இதமான சுட சுட நண்டு ரசம்.., இலகுவாக செய்வது எப்படி?
மழைக்காலத்தில் ஏற்படும் வறட்டு இருமல், சளி போன்றவற்றை நிரந்தரமாக நீங்க இந்த நண்டு ரசத்தை சாப்பிடலாம்.
அந்தவகையில், வீட்டிலேயே சுவையான நண்டு ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- பூண்டு- 10 பல்
- நண்டு- 5
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- தக்காளி-1
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு சேர்த்தது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்த நண்டு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் காய்ந்தமிளகாய், அரைத்த சீரகம் மிளகு விழுதை சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் கறிவேப்பிலை, வேகவைத்த ஒரு தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து அரைத்த நண்டை வடிகட்டி இதில் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
இறுதியாக 10 நிமிடம் கொதித்து வந்ததும் இதில் உப்பு மற்றும் கொத்தமல்லி இலை தூவி பருகலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |