ஸ்டாலினை தூக்கி ஏறிய ஆசைப்படும் கனிமொழி - நாஞ்சில் சம்பத் பேச்சு
திமுக தலைவர் பதவியில் இருந்து ஸ்டாலினை தூக்கி ஏறிய கனிமொழி ஆசைப்படுவதாக, நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.
ஸ்டாலினை தூக்கி ஏறிய ஆசைப்படும் கனிமொழி
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தவெகவின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், "இப்போது 6 மாத காலம் ஆட்சி தாங்குமா என அண்ணன் ஸ்டாலின் கேட்கிறார்.

நாஞ்சில் சம்பத் மிகுந்த கவலையுடன் சொல்வேன். நீங்கள் 6 மாத காலம் திமுக தலைவராக இருக்க முடியுமா என்று யோசியுங்கள். உங்கள் கட்சியிலேயே உச்சகட்ட குழப்பம் அரங்கேறி உள்ளது.
உங்களை தூக்கி தூர, எறிந்துவிட்டு கனிமொழி அந்த இடத்தில் உட்கார வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஷாஜஹான் குடும்பத்தில் நடந்ததுபோல உதயநிதியும் அந்தப் பதவியை அலங்கரிக்க ஆசைப்படுகிறார்.
நாங்கள் 108 இடங்களைப் பிடித்து அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறோம். ஆட்சி அமைக்க 14 நாட்கள் அவகாசம் கோரினோம். ஆளுநர் அர்லேகரோ திமுக ஆட்சி அமைக்கக் கோரினாலோ, அதிமுக கோரினாலோ நான் அவர்களையும் அழைப்பேன் என்றார்.

அதை நாஞ்சில் சம்பத் மறக்கவில்லை. ஒரு சதித்திட்டம் நடப்பதை உணர்ந்து 4 நாட்கள் நான் தூங்காமல் குமுறிக் குமுறி அழுதேன். திமுக ஒரு சதிக் கிடங்கு. ஏதேனும் செய்வார்கள் என்று கணித்தேன்.
நமக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்க இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக முன்வந்தனர். அவர்களை அழைத்து ஆதரவை திரும்ப பெற ஸ்டாலின் அழுத்தம் கொடுத்தார்.
மதச்சார்பற்ற கொள்கைகள் திமுகவுக்கு குத்தகை போட்டுத் தரவில்லை. எங்கள் தலைவர்தான் உண்மையான மதச்சார்பற்ற தலைவர். பாஜக, காங்கிரஸுக்கு அடுத்த கட்சி தவெகதான். அதனால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் தூக்கமில்லாமல் புலம்பிக்கொண்டு இருக்கிறார்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |