கோடிக்கணக்கில் ஏலம் போன நெப்போலியன் தொப்பி.., விலை தெரியுமா?
பிரஞ்சு பேரரசன் நெப்போலியன் போனபார்ட் தொப்பியை ஒருவர் ரூ.17.5 கோடி ஏலம் எடுத்திருக்கிறார்.
நெப்போலியன் தொப்பி
19 -ம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆண்ட பேரரசர் நெப்போலியன் போனபார்ட். இவர், அணிந்திருந்த உடமைகளில் தொப்பியும் ஒன்று.
பொதுவாகவே, ஒருவர் தொப்பி அணியும் போது இரு முனைகளும் முன்னும், பின்னும் இருக்கும்படி தான் அணிவார்கள். ஆனால், நெப்போலியன் மட்டும் தொப்பியின் இரு முனைகளும் தோள்பட்டை நோக்கி இருக்கும்படி அணிவார்.
இதனால், போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தங்களுடைய தலைவர் எங்கே உள்ளார் என நெப்போலியன் படைவீரர்கள் எளிதாக கண்டறிய முடியும். இதற்கு போர்க்காள பாணி என்றும் கூறுவர்.
கோடிக்கணக்கில் ஏலம்
கடந்த ஆண்டு இறந்த தொழிலதிபர் ஒருவரின் சேகரிப்பில் இருந்த நெப்போலியனின் தொப்பி உள்பட சில அரும்பொருள்கள் பாரிஸில் நேற்று ஏலம் விடப்பட்டது.
ஆரம்பத்தில், நெப்போலியனின் தொப்பி 6.5 லட்சம் டொலருக்கு ஏலம் வந்தது. பின்னர், அதனுடைய தொகை உயர்ந்து கொண்டே வந்து 21 லட்சம் டொலருக்கு ஏலம் போனது. இந்த தொப்பியை ஒஸீனா ஏல மையத்தின் தலைவர் ழா பே ஒஸீனா எடுத்தார். அப்போது அரங்கிலிருந்து அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.
இன்னும் சில நாள்களில் ரிட்லி ஸ்காட்டின் நெப்போலியன் திரைப்படம் வரவிருக்கும் நிலையில் இந்த ஏலம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |