பயத்தில் பாஜக நிர்வாகிகளை மிரட்டும் முதலமைச்சர்!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
திமுக எவ்வளவோ பார்த்துவிட்டது, இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என்று பேசியபடி வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, எங்களது மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
எந்தவிதமான நோட்டீஸ் வழங்காமல் காவல்துறை கைது செய்துள்ளது, பாஜக நிர்வாகிகள் மீது தேடி தேடி வழக்குப் போடுகிறார்கள்.
போலிசாரை கொண்டு பாஜக வை மிரட்டி பார்க்க நினைக்கிறது திமுக, இந்த மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்.
செந்தில் பாலாஜி எத்தனை கோடி ஊழல் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும், பாஜக மீது தவறான நடவடிக்கை எடுத்தால் யார் என்பதை உணர்த்த நேரிடும்.
செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை தொடக்கம் மட்டுமே, பாஜகவை சீண்டினால் பலன் உண்டு என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |