ரூ 32,000 கோடி வரி ஏய்ப்பு செய்த நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ்
இன்போசிஸ் நிறுவனம் ரூ 32,403 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக GST நிர்வாகம் நோட்டிஸ் வழங்கியதையடுத்து, இதனை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.
மாநில GST நிர்வாகம்
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனம் இன்ஃபோசிஸ். இவர்களே ரூ 32,403 கோடி GST வரி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மாநில GST நிர்வாகம் ரூ 32,403 கோடி வரி ஏய்ப்பு தொடர்பில் காரணம் காட்டுவதற்கான முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜூலை 2017 முதல் மார்ச் 2022 வரையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் GST செலுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், விதிமுறைகளின்படி, தங்களின் வெளிநாட்டு அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் செலவுகளுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விதிமுறைகளுக்குள் வருவதில்லை
இன்போசிஸ் அளித்துள்ள விளக்கத்தில், அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் தங்களது நிறுவனம் செலுத்தியுள்ளது என்றும் இந்திய நிறுவனத்திற்கு வெளிநாட்டு கிளைகள் வழங்கும் சேவைகள் ஜிஎஸ்டி வரி விதிமுறைகளுக்குள் வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்போசிஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக அறிக்கை வெளியான நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகள் இன்று 1 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |