குவைத் தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
குவைத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்ததாகவும், அதில் பலர் பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியானது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் இந்தியாவிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
''குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது'' என தெரிவித்துள்ளார்.
The fire mishap in Kuwait City is saddening. My thoughts are with all those who have lost their near and dear ones. I pray that the injured recover at the earliest. The Indian Embassy in Kuwait is closely monitoring the situation and working with the authorities there to assist… https://t.co/cb7GHN6gmX
— Narendra Modi (@narendramodi) June 12, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |