100வது வயதில் உயிரிழந்த தாயார்! உடலை சுமந்து சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி.. வீடியோ
மறைந்த தாயின் உடலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுமந்து சென்ற மனதை உருகவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100). உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
100வது பிறந்தநாளில்
இந்த நிலையில் இன்று ஹீராபென் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயின் மரணத்தை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.
#WATCH | Gandhinagar: Prime Minister Narendra Modi carries the mortal remains of his late mother Heeraben Modi who passed away at the age of 100, today. pic.twitter.com/CWcHm2C6xQ
— ANI (@ANI) December 30, 2022
தாயாரின் உடலை சுமந்த மோடி
100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குஜராத் மாநிலத்தின் காந்தி நகருக்கு மோடி புறப்பட்டு சென்று தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஹீராபென் உடலை சுமந்தபடி சென்றார்.
शानदार शताब्दी का ईश्वर चरणों में विराम... मां में मैंने हमेशा उस त्रिमूर्ति की अनुभूति की है, जिसमें एक तपस्वी की यात्रा, निष्काम कर्मयोगी का प्रतीक और मूल्यों के प्रति प्रतिबद्ध जीवन समाहित रहा है। pic.twitter.com/yE5xwRogJi
— Narendra Modi (@narendramodi) December 30, 2022
मैं जब उनसे 100वें जन्मदिन पर मिला तो उन्होंने एक बात कही थी, जो हमेशा याद रहती है कि કામ કરો બુદ્ધિથી, જીવન જીવો શુદ્ધિથી यानि काम करो बुद्धि से और जीवन जियो शुद्धि से।
— Narendra Modi (@narendramodi) December 30, 2022