அசௌகரியமாக உணர்ந்த கே.கே.. கடைசி நிமிட வீடியோ!
பிரபல பாடகர் கே.கே கடைசியாக பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் அசௌகரியமாக உணர்ந்ததை காட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கொல்கத்தாவின் நஸ்ரூல் மஞ்சாவில் உள்ள கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் கே.கே கலந்துகொண்டார். அப்போது மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு ஒரு விதமான அசௌகரிய உணர்வு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக பாடுவதை நிறுத்திவிட்டு, அங்கிருந்தவர்களுக்கு நன்றி கூறிவிட்டு மேடையின் பின்பக்க வழியாக சென்றார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
தனது ஓட்டல் அறைக்கு சென்ற கே.கே, இதயம் கனமாக இருப்பதாக கூறிய சில நொடிகளிலேயே அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கே.கே, வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கே.கே.வின் தலை மற்றும் முகத்தில் சிறுகாயங்கள் இருப்பதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மயங்கி விழுந்ததால் ஏற்பட்ட காயமா என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The very moment when #KK felt uneasy and was taken to CMRI hospital, #Kolkata. He was declared brought dead.
— Madhuri Rao (@madhuriadnal) June 1, 2022
He performed the show and ended it.#RIP #KK Not KK pic.twitter.com/WFOHKdCqFn
#EXCLUSIVE
— Tirthankar Das (@tirthaMirrorNow) May 31, 2022
The very moment when playback singer KK was being taken back to hotel after he complained about his health condition. He has been declared brought dead by the doctors of CMRI. #KK #NewsToday #KKsinger #KKDies #kkdeath #SingerKK@ANI @MirrorNow @TimesNow @htTweets pic.twitter.com/zX5A2ZPvTW
இதற்கிடையில், கே.கே பங்கேற்ற நிகழ்ச்சி அரங்கமானது 2,500 மட்டுமே கலந்துகொள்ளக் கூடியது என்றும், அன்றைய தினம் 5,000 பேர் பங்கேற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ஏ.சி குறைப்பால் வெப்பம் மிகவும் அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
AC wasn't working at Nazrul Mancha. he performed their and complained abt it bcoz he was sweating so badly..it wasnt an open auditorium. watch it closely u can see the way he was sweating, closed auditorium, over crowded,
— WE जय (@Omnipresent090) May 31, 2022
Legend had to go due to authority's negligence.
Not KK pic.twitter.com/EgwLD7f2hW
#WATCH | Singer KK died hours after a concert in Kolkata on May 31st. The auditorium shares visuals of the event held some hours ago. KK was known for songs like 'Pal' and 'Yaaron'. He was brought dead to the CMRI, the hospital told.
— ANI (@ANI) May 31, 2022
Video source: Najrul Manch FB page pic.twitter.com/YiG64Cs9nP
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'கேகே என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அவரது பாடல்கள் அனைத்து வயதினரையும் கவர்ந்த, பலவிதமான உணர்வுகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் அவரை எப்போதும் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி' என இரங்கல் தெரிவித்துள்ளார்.
Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 31, 2022