எனது நண்பர் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள்: இந்திய பிரதமர் மோடி
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்றதற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், கடந்த 20 ஆண்டுகளில் 2வது முறையாக வெற்றி பெற்ற முதல் ஜனாதிபதி என்ற சாதனையை இமானுவல் மேக்ரான் படைத்தார்.
வெற்றி பெற்ற அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரான்சின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ள எனது நண்பர் இமானுவல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள்! இந்தியா - பிரான்ஸ் இடையிலான போர் திறன் வாய்ந்த கூட்டணியை ஆழமாக தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.