பல நோய்களுக்கு மருந்தாக மாறும் நார்த்தங்காய்! மலச்சிக்கல், சிறுநீரக கற்கள் தொல்லை இனி இல்லை
பல்வேறு நோய்களை தீர்க்கும் அதிமருந்தாக நார்த்தங்காய் செயல்படுகிறது.
வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நாரத்தங்காயை வட்ட வட்டமாய் நறுக்கி உப்பு சேர்த்து ஒரு மண் பானையில் இட்டு வாயை துணியால் மூடி விடவும். இதனை அவ்வப்போது வெயிலில் உலர்த்தி வரவும். இப்படி 40 நாட்கள் செய்து பிறகு அதில் இருந்து தினமும் ஒரு துண்டை எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வர வயிற்றுப் புண் குணமாகும்.
நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும்.
நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.
மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது நார்த்தங்காய்.
நார்த்தங்காய் சாறு உட்கொள்வது இதய நோய்கள், பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நார்த்தங்காயில் நல்ல அளவு வைட்டமின் சி இருப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
குடல் செயல்பாட்டை மேம்படுத்தவும், வாய்வு, வீக்கம், குமட்டல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான பிரச்சினைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.