2030-க்குள் அடுத்த தலைமுறை விமானங்களை உருவாக்கவுள்ள நாசா
நாசா 2030-க்குள் அடுத்த தலைமுறை விமானங்களை உருவாக்கவுள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, குறைந்த கார்பனை வெளியிடும் அடுத்த தலைமுறை வணிக விமானத்தை உருவாக்க, விமானப் போக்குவரத்து நிறுவனமான போயிங்குடன் கைகோர்த்துள்ளது.
"Sustainable Flight Demonstrator" (SFD) எனும் இந்த திட்டத்தில் அடுத்த ஏழு ஆண்டுகளில், NASA 425 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்யவுள்ளது, அதே நேரத்தில் போயிங் மற்றும் அதன் பங்குதாரர்கள் 725 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழிக்கவுள்ளன.
சுற்றுச்சூழலுக்கும், வணிக விமானப் போக்குவரத்துத் துறைக்கும், உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கும் அதிக எரிபொருள் திறன் கொண்ட எதிர்கால வணிக விமானங்களைத் தயாரிப்பதே இந்த திட்டத்தின் குறிக்கோள் என்று நாசா தலைவர் பில் நெல்சன் கூறினார்.
Reuters
"நாங்கள் வெற்றி பெற்றால், 2030-களில் பொதுமக்கள் விண்ணுக்கு எடுத்துச் செல்லும் விமானங்களில் இந்த தொழில்நுட்பங்களை காணலாம்" என்று நெல்சன் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
போயிங் மற்றும் நாசா ஆகிய இரு நிறுவங்களும் டிரான்சோனிக் ட்ரஸ்-பிரேஸ்டு விங் எனப்படும் ஒரு புதுமையான இறக்கையை பறக்க-சோதனை செய்ய திட்டமிட்டுள்ளன.
NASA மற்றும் Boeing ஆகியவை அடுத்த தலைமுறை விமானத்தின் வளர்ச்சி, 2050-க்குள் விமானத்திலிருந்து நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்ய உதவும் என்று கூறியது.