இன்னும் உயிர் இருக்கு! செவ்வாய் கிரகத்தில் சாதனைகளை படைத்து கொண்டிருக்கும் குட்டி ஹெலிகாப்டர்
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட Ingenuity ஹெலிகாப்டரிடமிருந்து இரண்டு மாதங்கள் கழித்து தகவல் கிடைத்ததையடுத்து, நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் பல சாதனைகளை படைத்து கொண்டிருக்கும் குட்டி ஹெலிகாப்டர்!
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய குட்டி ஹெலிகாப்டர் 'Ingenuity' பல்வேறு சாதனைகளை படைத்து கொண்டிருந்தது.
செவ்வாய் கிரகத்தில் Ingenuity ஹெலிகாப்டர் 52 முறை பறந்துள்ளது. 16 மீட்டர் உயரத்தில் பறந்து மணிக்கு 23.4 கி.மீ வேகத்தை எட்டியது. இது செவ்வாய் கிரகத்தில் அடையப்பட்ட மிக உயர்ந்த உயரமும் வேகமும் ஆகும்.
NASA
ஆனால் திடீரென்று ஏப்ரல் 26-க்குப் பிறகு Ingenuity ஏதோ பிரச்சினையில் சிக்கியது. ஏனெனில் அதனிடமிருந்து எந்த பதிலும் தகவலும் வரவில்லை.
63 நாட்களாக எந்த செய்தியும் இல்லை, பூமிக்கு எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. இதனால் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தனர்.
இரண்டு மாதம் கழித்து கிடைத்த மகிழ்ச்சி தகவல்
ஆனால் ஜூன் 28-ஆம் திகதி அனைத்து கவலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, Ingenuity ஹெலிகாப்டரிமிருந்து ஒரு செய்தி விஞ்ஞானிகளை சென்றடைந்துள்ளது.
NASA
இத்தனை நாட்களாக செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸெரோ பள்ளம் பகுதியின் சிக்கலான தன்மையே தகவல் தொடர்பு பிரச்சனைக்கு காரணமாக இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Ingenuity ஹெலிகாப்டர்
பிப்ரவரி 2021-ல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்செவரன்ஸ் ரோவருடன் Ingenuity ஹெலிகாப்டரும் சென்றது.
செவ்வாய் கிரகத்தின் வானில் பறந்த முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரின் எடை வெறும் 1.8 கிலோ மட்டுமே.
NASA
செவ்வாய் கிரகத்தில் பறக்க முடியுமா என்பதை அறிவது தான் இதன் முக்கிய குறிக்கோள். கடந்த காலங்களில் ரைட் சகோதரர்கள் ஒரு சிறிய விமானம் மூலம் பூமியில் பறக்க முடியுமா என்று சோதனை செய்தனர். அதே பணியைத் தான் Ingenuity ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் செய்துள்ளது.
Ingenuity நிமிடத்திற்கு 2400 முறை சுழலும் இரண்டு சுழலிகளைக் கொண்டுள்ளது. பூமியில் உள்ள ஹெலிகாப்டர்களை விட இதன் சுழலி வேகம் அதிகம். இன்ஜினுட்டியின் ஒவ்வொரு ரோட்டரும் கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட நான்கு பிளேடுகளைக் கொண்டுள்ளது. ஹெலிகாப்டரில் இரண்டு கேமராக்கள் உள்ளன. Ingenuity ஏற்கனவே செவ்வாய் கிரகத்திலிருந்து சில புகைப்படங்களை அனுப்பியுள்ளது.
NASA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |