சிறுநீரில் இருந்து குடிநீர்- நாசா விஞ்ஞானிகளின் சோதனை வெற்றி
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு அவர்களுக்கு பாரிய பிரச்சனையாக இருப்பது தண்ணீர் மற்றும் உணவு, இதற்கு மாற்று வழியாக என்ன செய்யலாம் என்பதை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் விண்வெளியில் விளைவித்து கிடைக்கக்கூடிய உணவுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்தாலும், வீரர்கள் வெளியேற்றும் கழிவுகளில் இருந்து தண்ணீரை மறுசுழற்சி செய்யும் ஆய்வும் நடந்து கொண்டிருந்தது.
இந்த முயற்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது உடல் கழிவை சுத்திகரிப்பு செய்வதன் மூலம் வீரர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கப்பெறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
UPA( Urine Processor Assembly) முறைப்படி, வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையை மறுசுழற்சி செய்து அதன் மூலம் தண்ணீரை பெறும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது முழுமையான வெற்றியடையும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் வீரர்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும்.
மிக முக்கியமாக விண்வெளி மையத்தில் சேரும் மனித கழிவுகளை கணிசமாக குறைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |