முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை தரை இறக்கிய நாசா! விண்வெளி ஆய்வில் புதிய சாதனை!
நாசா விஞ்ஞானிகள் விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஒரு ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தரை இறக்கியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் பல சக்கர ரோவர்களை இயக்கியிருக்கும் நாசா முதல் முறையாக சிறிய ஹெலிகாப்டரை பறக்கவிடவுள்ளது.
இன்ஜெனியூனிட்டி (Ingenuity) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டது. இந்த ஹெலிகாப்டரை சுமந்து சென்ற பெர்சிவரென்ஸ் ரோவர் விண்கலம் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.
#MarsHelicopter touchdown confirmed! Its 293 million mile (471 million km) journey aboard @NASAPersevere ended with the final drop of 4 inches (10 cm) from the rover's belly to the surface of Mars today. Next milestone? Survive the night. https://t.co/TNCdXWcKWE pic.twitter.com/XaBiSNebua
— NASA JPL (@NASAJPL) April 4, 2021
உலகத்தைக் கடந்து வேறொரு கோளில் முதன்முறையாக ஹெலிகாப்டர் பறக்க உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி துறையில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அமையவுள்ளது.
இந்த முயற்சியை ஏப்ரல் 8-ஆம் திகதி மேற்கொள்ள நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால், அதனை ஏப்ரல் 11-ஆம் திகதிக்கு மாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் பறக்கும் பட்சத்தில், கிரகங்களை ஆய்வு செய்வதில் புதிய மைல்கல்லை எட்டவுள்ளது நாசா.
Soon @NASA will attempt the first powered, controlled flight on another planet! Ingenuity #MarsHelicopter has had a long 293-million-mile ride in the belly of @NASAPersevere to Mars, and we are so excited for this test! Learn more: https://t.co/ZfmuNd42Ga pic.twitter.com/dF2J8uAckY
— Thomas Zurbuchen (@Dr_ThomasZ) April 3, 2021
செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்க வைப்பது என்பது பூமியை விட பல மடங்கு கடினமான செயல். புவியீர்ப்பு விசை இருந்தாலும் பூமியுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு புவியீர்ப்பு விசை மட்டுமே உள்ளது. வளிமண்டல மேற்பரப்பு பூமியுடன் ஒப்பிடும்போது 1 விழுக்காடு அடர்த்தியாக இருப்பதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், சூரிய ஒளியும் பாதியளவு மட்டுமே கிடைக்கும் என விஞ்ஞானிகள் கூறுகினற்னர்.
மேலும், தட்ப வெட்பநிலைகள் கணிக்க முடியாத நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக, இரவு நேரத்தில் மைனஸ் 90 டிகிரி வரை வெப்ப நிலை குறையும் என கூறும் விஞ்ஞானிகள், அந்த நிலையில் எலக்ட்ரானிக் பொருட்களை உடையவும், உறையவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் சமாளிக்க வேண்டும் என்றால், internal heaters இருக்க வேண்டுமாம். ஹெலிகாப்டரின் முதல் செயல்பாடு மிகவும் சவாலாக இருக்கும் எனவும், இந்த முயற்சி சாத்தியப்பட்டால், விண்வெளி ஆராய்ச்சியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும் இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.