உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கி! வெற்றிகரமாக விண்ணில் ஏவிய NASA!
உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளித் தொலைநோக்கியானது, சனிக்கிழமையன்று பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் (930,000 மைல்கள்) தொலைவிலுள்ள ஒரு விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope), 1989-ஆம் ஆண்டு முதல் சுமார் 3 தசாப்தங்களாக, 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டது.
தொலைநோக்கியை ஏந்திச்செல்லும் ஏரியன் 5 (Ariane 5) ரொக்கெட்டானது, பிரஞ்சு கயானாவில் உள்ள கூரோ விண்வெளி மையத்தில் இருந்து சனிக்கிழமையன்று மாலை 12:20 UTC மணியளவில் விண்வெளியில் செலுத்தப்பட்டது.
இதனை ஐரோப்பிய (ESA) மற்றும் கனேடிய (ACS) விண்வெளி நிறுவங்கள் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளனர்.
We have LIFTOFF of the @NASAWebb Space Telescope!
— NASA (@NASA) December 25, 2021
At 7:20am ET (12:20 UTC), the beginning of a new, exciting decade of science climbed to the sky. Webb’s mission to #UnfoldTheUniverse will change our understanding of space as we know it. pic.twitter.com/Al8Wi5c0K6
ESA தலைவர் ஜோசப் ஆஷ்பேச்சர் (Josef Aschbacher), "நாங்கள் விண்கலத்தை மிகத் துல்லியமாக சுற்றுப்பாதையில் அனுப்பியுள்ளோம்... ஏரியன் 5 மிகச் சிறப்பாகச் செயல்பட்டது என்று கூறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
இந்த ஏவுகணை அதன் தொலைதூர இலக்கை அடைய ஒரு மாதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள பிரபஞ்சம் மற்றும் பூமி போன்ற கோள்களின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் மேலும் புரிந்துகொள்ள உதவும் புதிய தடயங்களை கண்டுபிடிக்க இந்த தொலைநோக்கியானது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய முதல் விண்மீன் திரள்கள் மற்றும் முதல் நட்சத்திரங்கள் உருவாகும் பலவீனமான பளபளப்பைக் கண்டறிய அந்த சக்திவாய்ந்த தொலைநோக்கி உதவும் என நம்பப்படுகிறது.