வேற்று கிரக வாசிகள் இருப்பது உண்மையா! நாசா வெளியிட்ட ஆச்சரிய தகவல்
பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மை தான் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தலைவர் பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.
வேற்றுகிரகவாசிகள் உடல்
சில தினங்களுக்கு முன்பு மெக்சிகோ காங்கிரஸ் நடைபெற்ற போது இரண்டு பெட்டிகள் உலகத்தின் முன்பு காட்சிப்படுத்தப்பட்டது.
அதில் பெரு நாட்டு சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் 1000 ஆண்டுகள் பழமையான வேற்றுகிரகவாசிகளின் 2 உடல்கள் இருந்தன.
மேலும் அதன் 30 சதவீத மரபணுக்கள் முற்றிலுமாக அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவித்தனர்.
ஏலியன்கள் இருப்பது உண்மை
இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தலைவர் பில் நெல்சன் வேற்று கிரக வாசிகள் இருப்பது உண்மை தான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் (UFO) மற்றும் அசாதாரண நிகழ்வுகள்(UAP) குறித்து ஆய்வு அறிக்கை ஒன்றும் சமர்பிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் இது தொடர்பாக சுயாதீன ஆராய்ச்சியை மேற்கொள்ள தனி துறையும், UAP ஆராய்ச்சி இயக்குனரையும் நாசா நியமித்துள்ளது.
அதனடிப்படையில் குழுவின் முதல் ஆய்வு அறிக்கையில், UAP அமெரிக்க வான்வெளிக்கு அச்சுறுத்தலாக உள்ளது, அத்துடன் தன்னை தெளிவாக வெளிக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ளது.
ஆதார அணுகுமுறை, பொதுமக்கள் ஈடுபாடு மற்றும் தொடர் கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) ஆகியவற்றின் உதவியுடன் இத்தகைய அரிய நிகழ்வுகள் தொடர்ந்து அடையாளம் காண இருப்பதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |