நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சி திட்டத்திற்கு இந்திய வம்சாவளி பெண் தேர்வு!
கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்த்த 24 வயதான பெண் ஒருவர் விண்வெளி வீரர் பயிற்சி திட்டத்திற்காக நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயதான ஆதிரா ப்ரீத்தா ராணி, விண்வெளி வீரர் பயிற்சித் திட்டத்திற்காக தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தால் (NASA) தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தனது கனவுகள் அனைத்தையும் நனவாக்கியுள்ளார்.
ஆதிரா ப்ரீத்தா ராணிக்கு பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே விண்வெளி மற்றும் விண்வெளி வீரர்கள் மீது ஆர்வம் இருந்தது. அவர் கேரளாவின் தலைநகரில் உள்ள வானியல் சமூகமான அஸ்ட்ராவின் வகுப்புகளில் கலந்துகொள்ளத் தொடங்கியபோது அவருடைய அறிவு விரிவடைந்தது.
தன் கனவுகளை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஆதிரா, படிப்போடு சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தார். அவர் தனது இளம் வயதிலேயே கனடாவின் ஒட்டாவாவில் உள்ள அல்கோன்குவின் கல்லூரியில் சேர்ந்தார்.
ரோபாட்டிக்ஸ் படித்து ஸ்காலர்ஷிப்பில் இருந்தாள். ஆனால் விமானி ஆக வேண்டும் என்பது அவரது கனவு. எனவே, ஒருவர் விமானி ஆவதற்கு விமானப்படையில் சேர வேண்டிய அவசியமில்லை என்று கேள்விப்பட்டதும், பயிற்சிக்கான பணத்தைச் சேமித்து வைத்தார். அவள் ரோபோட்டிக்ஸ் படிப்பையும் நல்ல மதிப்பெண்களுடன் முடித்தார்.
அதே நேரத்தில் அவருக்கு திருமணமும் ஆனது. இதற்குப் பிறகு, அவரும் அவரது கணவரும் கனடாவில் விண்வெளி ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சியை தொடங்கினார்கள். சில மாதங்களுக்கு முன்பு, அவர்கள் எக்ஸோ ஜியோ ஏரோஸ்பேஸ் (Exo Geo Aerospace) நிறுவனத்தையும் தொடங்கினர். அவர் பல்வேறு விண்வெளி வீரர்களின் பயிற்சித் திட்டங்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.
பின்னர் சர்வதேச விண்வெளி அறிவியல் நிறுவனம் நடத்திய விண்வெளி வீரர் பயிற்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பயிற்சித் திட்டத்தை நாசா, கனடிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனடாவின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து நடத்துகின்றன. மருத்துவப் பரிசோதனைகள் உட்பட பல்வேறு நிலைகளைக் கடந்தார்.
மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை தொடரும் இந்தத் திட்டத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பயிற்சியை முடித்தால், கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் மூன்றாவது இந்தியப் பெண் அதிரா ஆவார்.