அண்டங்கள் மோதிக்கொள்ளும் அதிசய புகைப்படங்களை வெளியிட்ட நாசா
Galactic Romance எனப்படும் அண்டங்கள் மோதிக்கொள்ளும் அதிசய புகைப்படங்களை நாசா தனது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பால்வீதிகள் ஓன்றுடன் ஒன்று நெருக்கமாக இருக்கும்போது அவற்றின் ஈர்ப்பு விசை காரணமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது அண்ட மோதல் என்று அழைக்கப்படுகிறது.
இந்த அண்ட மோதல் நிகழ்வு பல மில்லியன் ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதனை படம் பிடிக்க Hubble Space Telescope உதவியதாக நாசா பதிவிட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் குறித்து பதிவிட்டுள்ள நாசா, ''பால்வீதிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் வியக்கத்தக்க நிகழ்வின் புகைப்படங்கள் இவை.
இவற்றில் சில வின்மீண் திரல்கள் உருவம் சிதைந்து வாயு மற்றும் தூசியினாலா மேகங்களை போல காட்சியளிக்கின்றன.
இந்த சுழல் விண்மீன் திரள்களிலிருந்து சுழல் கைகள் இழுக்கப்பட்டுள்ள நிலையில் சில விண்மீன் திரல்கள் cosmic streamer-ஆக உருவாக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |