சுனிதா வில்லியம்ஸை அழைத்துவர டிராகன் விண்கலம் சென்றது.., பூமிக்கு எப்போது வருவார்கள்?
நாசாவின் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பத்திரமாக அழைத்து வரும் நோக்கத்தில் டிராகன் விண்கலம் புறப்பட்டுள்ளது.
நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் மாதம் போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்ற நிலையில் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
ஸ்டார்லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர் சிக்கல்கள் மற்றும் ஹீலியம் கசிவுகளின் காரணமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்யும் பணியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஆனால் சிக்கல்கள் எதுவும் சரி செய்யப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆள் இல்லாமல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பியது.
இந்நிலையில் நாசாவின் SpaceX Crew-9 விண்கலம் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளிப் படை நிலையத்தில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-40ல் இருந்து நேற்று இரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
NASA/Keegan Barber
சுமார் 28.5 மணி நேரம் பயணித்து இந்த விண்கலம் இன்று மாலை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடையும் என கூறப்படுகிறது.
இதையடுத்து சர்வதேச விண்வெளி மையத்துடன் இந்த டிராகன் விண்கலத்தின் கேப்சூயூல் டாக் செய்யப்படும் என கூறப்படுகிறது.
டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பும் பயணத்தில் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ல் ஆகியோருக்காக இரண்டு இருக்கைகள் காலியாக அனுப்பட்டுள்ளன.
சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என கூறப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |