இந்த அணி வென்றால் நிலவுக்கு செல்ல உள்ள கால்பந்து - நாசா அறிவிப்பு

United States of America NASA FIFA World Cup
By Karthikraja Jul 04, 2026 07:25 AM GMT
Report

அமெரிக்க அணி பிபா உலக கால்பந்து கிண்ணத்தை வென்றால், நிலவுக்கு கால்பந்தை அனுப்புவதாக நாசா அறிவித்துள்ளது.

பிபா உலக கால்பந்து கிண்ணம்

2026 பிபா உலக கால்பந்து கிண்ணத்தை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தி வருகின்றன.

இதுவரை அமெரிக்க ஆண்கள் அணி பிபா உலக கால்பந்து கிண்ணத்தை வென்றது இல்லை. 

இந்த அணி வென்றால் நிலவுக்கு செல்ல உள்ள கால்பந்து - நாசா அறிவிப்பு | Nasa To Send Football To Moon If Us Wins Fifa Cup

ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், போஸ்னியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அமெரிக்கா ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா பிபா உலக கால்பந்து கிண்ணத்தை வென்றால், கால்பந்து நிலவுக்கு அனுப்பப்படும் என நாசா தெரிவித்துள்ளது. 

இந்த அணி வென்றால் நிலவுக்கு செல்ல உள்ள கால்பந்து - நாசா அறிவிப்பு | Nasa To Send Football To Moon If Us Wins Fifa Cup

எதிர்கால நிலவுத் தளம் குறித்த நாசாவின் திட்டங்களை விவரித்த நாசாவின் தலைமை நிர்வாக அதிகாரி Jared Isaacman இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். 

60,000 இலவச பீட்சாக்களை வழங்கும் Dominos - என்ன காரணம்?

60,000 இலவச பீட்சாக்களை வழங்கும் Dominos - என்ன காரணம்?

நிலவுக்கு கால்பந்தை அனுப்ப உள்ள நாசா

மேலும் தனது எக்ஸ் பக்கத்திலும் இது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "அமெரிக்கா ஆண்கள் அணி உலகக் கிண்ணத்தை வெல்வது சாத்தியமற்றது என மக்கள் சொல்கிறார்கள். நிலவில் மனிதர்களை இறக்குவது சாத்தியமற்றது என்று மக்கள் கூறினார்கள்.

அமெரிக்கர்கள் அதை 6 முறை செய்தார்கள். அதன் பிறகு யாரும் அதைச் செய்யவில்லை. மேலும், நாங்கள் அதை மீண்டும் செய்கிறோம். கிட்டத்தட்ட சாத்தியமற்றதைச் சாதிப்பதில் அமெரிக்காவிற்கு ஒரு வளமான வரலாறு உண்டு. 

எனவே, நீங்கள் தடைகளைத் தகர்க்கும்போது, ​​பிபா உலக கால்பந்துமற்றும் அமெரிக்கா வீரர்களின் கையொப்பங்கள் உள்ள ஜெர்சிகளில் ஒன்றை நிலவுக்கு அனுப்புவோம்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அப்பல்லோ 14 விண்வெளிப் பயணத்திற்கு 2 கோல்ஃப் பந்துகளையும், தற்காலிகமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு மட்டையையும் இரகசியமாகக் கொண்டு சென்றது.

1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் திகதி, அந்த நாசா விண்வெளி வீரர் நிலவில் அந்தப் பந்துகளை அடித்து, மற்றொரு உலகில் ஒரு விளையாட்டை விளையாடிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US