கிரேக்க தேவதை பெயரில் புதிய சூப்பர் கணினியை அறிமுகப்படுத்திய NASA
விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாசா, தனது வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த மற்றும் திறமையான சூப்பர் கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘Athena’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கணினி, கலிபோர்னியாவின் Ames Research Center-இல் அமைந்துள்ள Modular Supercomputing Facility-யில் நிறுவப்பட்டுள்ளது.
Athena, நாசாவின் முந்தைய Aitken மற்றும் Pleiades கணினிகளை விட அதிக திறன் கொண்டது.
இது 20 petaflops-க்கும் மேற்பட்ட கணக்கீட்டு திறனை வழங்குகிறது. அதாவது, ஒரு வினாடியில் கோடிக்கணக்கான கணக்கீடுகளை செய்யும் திறன் கொண்டது.

இதன் மூலம் நாசா தனது ஆராய்ச்சி செலவுகளை குறைத்து, அதிக திறமையான கணினி பயன்பாட்டை பெறுகிறது.
நாசாவின் Chief Science Data Officer Kevin Murphy கூறியதாவது:
“Athena, நாசாவின் எதிர்கால விண்வெளி மற்றும் அறிவியல் திட்டங்களுக்கு தேவையான தனிப்பட்ட கணினி வளங்களை வழங்கும். இது ஆராய்ச்சியின் எல்லைகளை விரிவாக்கும்” என்றார்.
Athena கணினியின் முக்கிய பயன்பாடுகள்:
ரொக்கெட் ஏவுதல்களின் சிமுலேஷன்
அடுத்த தலைமுறை விமான வடிவமைப்பு
பெரிய அளவிலான AI foundation models பயிற்சி
விண்வெளி தரவுகளை விரிவாக பகுப்பாய்வு
இந்த கணினி, நாசா ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல், வெளிப்புற விஞ்ஞானிகளுக்கும் விண்ணப்பத்தின் மூலம் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
‘Athena’ என்ற பெயர், 2025-இல் நாசா பணியாளர்களிடையே நடத்தப்பட்ட போட்டியில் தெரிவு செய்யப்பட்டது.
கிரேக்க தேவதை Athena-வின் அறிவும் போர்திறனும், நாசாவின் ஆராய்ச்சி நோக்கங்களுடன் ஒத்துப்போகும் என்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டது.
இந்த புதிய சூப்பர் கணினி, நாசாவின் அடுத்த தலைமுறை விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான டிஜிட்டல் அடித்தளத்தை அமைக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
NASA Athena supercomputer launch, NASA most powerful computer 2026, NASA Ames Research Center computing, NASA AI foundation models training, NASA Athena vs Aitken performance, NASA space research supercomputer, NASA high performance computing news, NASA Athena petaflops speed, NASA technology innovation 2026, NASA supercomputer for rocket design