திடீரென கவனத்தை ஈர்த்த பாடசாலை புகைப்படம்... விசாரித்த நாசா விஞ்ஞானிகள்: அம்பலமான உண்மை
அவுஸ்திரேலியாவில் ஒரு பாடசாலை வளாகத்தில் விண்கல் ஒன்று விழுந்ததாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த நிலையில், அதன் உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வடகிழக்கு அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள பாடசாலையே திங்களன்று சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்ததுடன், நாசா விஞ்ஞானிகளும் உடனடியாக அது தொடர்பில் விசாரிக்கவும் தொடங்கினர்.
ஆனால் பாடசாலை நிர்வாகத்திடம் இருந்து உண்மையை தெரிந்து கொண்டதும், நாசா விஞ்ஞானிகளுக்கு முகம் சிவந்து போனதாம்.
பாடசாலை வளாகத்தில் விண்கல் விழுந்தது போன்ற தோற்றத்தை ஆரம்ப பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதாம்.
அது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் பலரது கவனத்தை ஈர்த்த நிலையில், உலகெங்கிலும் இருந்து அது உண்மையான விண்கல் என கருதி பலர் விசாரித்ததாக தலைமை ஆசிரியர் மார்க் ஆலன் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி நாசா விஞ்ஞானிகளும் விசாரித்ததே இதில் மறக்க முடியாத சம்பவம் என குறிப்பிட்டுள்ளார் மார்க் ஆலன்.