இலங்கை, இங்கிலாந்து முத்தரப்பு தொடரிலும் மிரட்டப்போகும் பாகிஸ்தான் வீரர்: அவர் கூறிய விடயம்
Naseem shah said i am yet to play peak cricket: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார்.
இலங்கை, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா விளையாட உள்ளார்.
நசீம் ஷா
பாகிஸ்தானின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா (Naseem Shah) காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இரண்டாவது போட்டியில் விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும், அவர் பவர்பிளேயில் வீசிய இரண்டு ஓவர்களில் வெறும் 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் நசீம் ஷா விளையாட உள்ளார்.
தனது அணுகுமுறை குறித்து நசீம் ஷா கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள ஆடுகளங்களின் தன்மை மற்றும் பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், தற்கால வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒரு துடுப்பாட்ட வீரனின் மனநிலையுடன் விளையாட வேண்டும்.
இந்தக் காலங்களில் ஒருவர் பந்துவீச்சாளராக மேலும் திறமைசாலியாகவும் மேம்பட்டவராகவும் ஆக வேண்டும். எனது சிறந்த ஆட்டத்தை நான் இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றே கருதுகிறேன். இதுவரை நான் விளையாடிய கிரிக்கெட்டில் குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் சில விடயங்கள் விடுபட்டிருந்தன.
எனது இலக்கு மிகவும் எளிமையானது; எனது இலக்குகள் அல்லது செயல்பாடுகளைப் பற்றி நான் வாய் திறந்து பேச வேண்டிய அவசியமே இருக்காத அளவிற்கு சிறப்பாக செயல்பட வேண்டும். காயங்கள் குறைவாக இருந்து, நல்ல லயத்துடன் பந்துவீசும்போது அனைத்தும் தானாகவே சரியாக அமைந்துவிடும்" என்றார்.
