இந்தியா செய்த அந்த சம்பவத்தை இங்கிலாந்து மறந்திடக் கூடாது! அடுத்த போட்டிக்கு முன் எச்சரிக்கும் மைக்கல் வாகன்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசன் உசைன், இந்திய அணியை குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா 1-1 என்ற வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.
இரு அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 2-ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளதால், நல்ல உத்வேகத்துடன் உள்ளது.
அதே சமயம் இந்தியாவை சாதரணமாக குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நாசர் உசைன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சமீபகாலமாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை சிறப்பாக விளையாடி வருகிறது. அதற்கு சிறந்த உதாரணமாக அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரை சொல்லலாம், அடிலெய்டில் 36 ஓட்டங்களுக்குல் ஆல் அவுட் ஆன இதே இந்திய அணி தான், அதன் பின் மீண்டும் எழுந்து அவுஸ்திரேலியா தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
எனவே இங்கிலாந்து, இந்தியாவை சாதரணமாக எண்ணிவிட வேண்டாம், அவர்கள் கடினமாக போராடக் கூடியவர்கள், குறிப்பாக லண்டன் மற்றும் டிராபோர்ட்டில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் நடப்பதால், இது இந்தியாவுக்கு சற்று சாதகமாக இருக்கும்.
இதை எப்போதும் இங்கிலாந்து நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.