பெற்றோராக மாறிய இங்கிலாந்தின் தன்பாலின ஈர்ப்பு வீராங்கனைகள்
இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகள் நட் சிவர்-ப்ரெண்ட், கேத்தரின் தங்கள் குழந்தையை வரவேற்றுள்ளனர்.
தன்பாலின ஈர்ப்பு வீராங்கனைகள்
மகளிர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீராங்கனைகள் கேத்தரின் மற்றும் நட் சிவர்-ப்ரெண்ட், கடந்த 2022ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த தன்பாலின ஜோடியில் கேத்தரின் 2023ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். எனினும் நட் சிவர் பிரண்ட் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஜோடி, பெற்றோர் ஆவதற்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக Egg-Freezing முறையை மேற்கொண்டனர்.
ஆண் குழந்தை
அதன்படி, கேத்தரின் தற்போது ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை நட் சிவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
32 வயதாகும் நட் சிவர் உலகளவில் சிறந்த வீராங்கனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐசிசி மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக அறிவிக்கப்பட்ட இவர், அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகி வருகிறார்.
Congratulations to the Sciver-Brunts on their new born! ❤#CricketTwitter pic.twitter.com/8L5Oc21air
— Female Cricket (@imfemalecricket) April 1, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |