WPL வரலாற்றில் சதம் விளாசிய முதல் வீராங்கனை! புதிய சாதனை படைத்த இங்கிலாந்து கேப்டன்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நட் சிவர்-ப்ரண்ட் சதம் விளாசி சாதனை படைத்தார்.
200 இலக்கு
வதோதராவில் நேற்று நடந்த WPL போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
@WPLT20/X
முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்தது. நட் சிவர்-ப்ரண்ட் சதமும், ஹேலே மேத்யூஸ் அரைசதமும் விளாசினர்.
WPL/X
பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
வரலாற்றில் சதமடித்த முதல் வீராங்கனை
அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 50 பந்துகளில் 6 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் விளாசினார். ஹேலே மேத்யூஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
BCCI
இப்போட்டியில் நட் சிவர்-ப்ரண்ட் (Nat Sciver-Brunt) 57 பந்துகளில் ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசியதன் மூலம் ஆட்டநாயகி விருது பெற்றார்.
மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் ஜார்ஜியா வோல் 99 ஓட்டங்கள் எடுத்ததே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
PTI
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |