80 சவரன் தங்கச்சங்கிலியை கைப்பற்றிய தமிழக வீரர் நடராஜன்! SRHயின் பாரிய கௌரவம்
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு, SRH அணி சார்பாக தங்க சங்கிலி பரிசளிக்கப்பட்டது.
SRH வெற்றி
நடப்பு ஐபிஎல் தொடரின் 35வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்துவீசி, 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஒரு மெய்டனும் அடங்கும்.
இந்த தொடரின் ஆரம்பத்தில் நடராஜனின் பந்துவீச்சு அந்த அளவுக்கு சோபிக்கவில்லை. ஆனால், டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக நடராஜன் அமைந்தார்.
YORKED! 🎯
— IndianPremierLeague (@IPL) April 20, 2024
T Natarajan gets Lalit Yadav with a perfect delivery 🔥🔥
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #DCvSRH pic.twitter.com/dABi6jakOd
80 சவரன் தங்க சங்கிலி
இதன்மூலம் அவர் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அத்துடன் அவரை சிறந்த ஐபிஎல் பந்துவீச்சாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி சார்பில் நடராஜனுக்கு 80 சவரன் தங்க சங்கிலி அளிக்கப்பட்டது.
இந்த சங்கிலி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் வீரருக்கு சூழ்ச்சி முயற்சியில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது தங்க சங்கிலியை வென்ற நடராஜன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடராஜன் 52 ஐபிஎல் போட்டிகளில் 58 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 4/19 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |