டெஸ்ட் அணியில் அமர்க்களமாக களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன்
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலானா 4-வது டெஸ்டில் தமிழக வீரர் நடராஜன் களமிறக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதனால் இந்தியா அவுஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இதில் வெற்றிபெறும் அணி பார்டர் - கவாஸ்கர் கிண்ணத்தை வெல்லும். இந்த நிலையில் இந்திய அணியில் தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் டெஸ்ட் விளையாட்டும் 300-வது வீரராக நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேப்போன்று 301-வது வீரராக வாஷிங்டன் சுந்தர் களமிறங்குகிறார்.
The stuff dreams are made of. A perfect treble for @Natarajan_91 as he is presented with #TeamIndia's Test ? No. 300. It can't get any better! Natu is now an all-format player. #AUSvIND pic.twitter.com/cLYVBMGfFM
— BCCI (@BCCI) January 14, 2021