T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜனின் பெயர் இல்லை: சரத்குமார் வருத்தம்
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜனின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிப்பதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
T20 உலகக்கோப்பை
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 9 -வது T20 உலகக்கோப்பைக்கான போட்டியானது அடுத்த மாதம் ஜூன் 1 -ம் திகதி முதல் 29 -ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கின்ற 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'A' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்த பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர்களின் ஒருவர் பெயர் கூட இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சரத்குமார் வருத்தம்
அந்தவகையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜனின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜனின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |