தோனி தலைமையில் விளையாட ஆர்வம்! கனவாகி போன தமிழன் நடராஜனின் ஆசை
தோனி தலைமையில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என தமிழக வீரர் நடராஜன் கூறியிருந்த நிலையில் அவர் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான நடராஜன் யார்க்கர் மன்னனாக வலம் வருகிறார். தொடர் காயங்கள் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் கிரிக்கெட் வாழ்வில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் அனைத்தில் இருந்தும் மீண்ட நடராஜன் ஐபிஎல் தொடரில் விளையாட உற்சாகமாக தயாராகியுள்ளார்.
இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக தான் நடராஜன் விளையாடியுள்ளார். ஆனால் இந்த முறை தோனி தலைமையில் #CSK அணியில் விளையாட விருப்பம் என யார்க்கர் நாயகன் நடராஜன் சமீபத்தில் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரின் அந்த கனவு நினைவாகவில்லை. ஏனெனில் மீண்டும் ஹைதராபாத் அணியே நடராஜனை ரூ 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.