ரூ.5 கோடி குறைவான ஊதியத்துடன் SRH அணிக்கு செல்லும் நடராஜன்
t.natarajan returns srh by trading with 5crores paycut: ரூ.10.75 கோடிக்கு DC அணியால் வாங்கப்பட்ட டி.நடராஜனை, SRH அணி டிரேடிங் மூலம் ரூ.5 கோடிக்கு வாங்கியுள்ளது.
SRH அணிக்கு செல்லும் நடராஜன்
2027 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் டி.நடராஜனை டிரேடிங் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி வாங்கியுள்ளது.

2020 முதல் 2024 வரை 5 ஐபிஎல் தொடர்களுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன், 2024 ஐபிஎல் தொடரில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதிலும் முக்கியப் பங்காற்றினார்.
Orange Army, our Nattu is coming home 😍🧡 https://t.co/686K713QUf
— SunRisers Hyderabad (@SunRisers) October 14, 2026
2025 வீரர்கள் ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்ட நடராஜன், தற்போது ரூ.5 கோடி என்ற திருத்தப்பட்ட கட்டணத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையவுள்ளார்.

டி.நடராஜனுக்கு பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சுழற்பந்து வீச்சாளர் ஜீஷான் அன்சாரியை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்கிறது.
Ready to write a new chapter in 💙❤️ Welcome to Dilli, Zee 🐅🫶 https://t.co/aKJIbWQ2O9
— Delhi Capitals (@DelhiCapitals) October 14, 2026
ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்களை கைப்பற்றிய அன்சாரி, அவர் வாங்கப்பட்ட அதே ரூ.40 லட்சம் கட்டணத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணையவுள்ளார்.