மீண்டும் பழைய நடராஜனாக திரும்புவேன்! உற்சாகத்துடன் பேசிய தமிழன்
மீண்டும் பழைய நடராஜனாக வர விரும்புகிறேன் என தமிழக வீரரான யார்க்கர் மன்னன் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர் காயங்கள் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக கணிசமான அளவு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் நடராஜன்.
பிப்ரவரி 12, 13 ஆகிய திகதிகளில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் நடராஜன் பெயரும் உள்ளது. அவர் அடிப்படை விலையான ரூ. 1 கோடியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடராஜன் அளித்துள்ள பேட்டியில், நான் ஐபிஎல் ஏலம் பற்றி அதிகம் யோசிக்கவில்லை, நான் எனது பலத்தில் கவனம் செலுத்தி கடினமாக உழைக்க விரும்புகிறேன்.
நான் அதைச் செய்தால், மீதமுள்ள விஷயங்கள் தானாக நடக்கும். இதற்கு முன்பு ஐபிஎல் மற்றும் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறேன், அதனால் மக்கள் என்னிடம் வலுவான ஆட்டத்தை எதிர்பார்க்கிறார்கள்.
நான் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடியவுடன் என் ரிதத்தை மீட்டெடுப்பேன். எனது யார்க்கர்கள் மற்றும் கட்டர்களில் கவனம் செலுத்துகிறேன்.
மீண்டும் பழைய நடராஜனாக வர விரும்புகிறேன்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வருகிறேன், அதனால் பதற்றம் இல்லை என்று சொன்னால் பொய் சொல்வதாக அர்த்தம் என கூறியுள்ளார்.