மிரட்டலான பந்துவீச்சு மூலம் முதலிடம்..ஊதா தொப்பியை கைப்பற்றிய நடராஜனுக்கு குவியும் பாராட்டு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி, நடப்பு ஐபிஎல்லில் முதலிடம் பிடித்த தங்கராசு நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஐபிஎல் 2024யில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் ஆடிய SRH அணி 201 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 200 ஓட்டங்கள் எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இப்போட்டியில் ஜெய்ஸ்வால் (67), ஹெட்மையர் (13) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
NATTU WITH THE PURPLE CAPLE. ? pic.twitter.com/u6poHQpqlO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 2, 2024
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை கைப்பற்றினார்.
நடராஜன் 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அவருக்கு வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
SRH அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் கூறுகையில், ''இது ஒரு அற்புதமான போட்டி. டி20 கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம். நடராஜன் ஒரு சிறந்த யார்க்கர் பந்துவீச்சாளர். அதிர்ஷ்டவசமாக சில விக்கெட்டுகளை பெற்றோம்'' என்றார்.
Purple looks ?????? on our Yorker King, doesn’t it? ??#PlayWithFire #SRHvRR pic.twitter.com/uFwF4TmA7V
— SunRisers Hyderabad (@SunRisers) May 2, 2024
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |