நம்பிக்கையுடன் களமிறங்கிய ருத்ராஜ்.. ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட நடராஜன்!
ஐபிஎல்லின் இன்றைய போட்டியில் CSK வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டை தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் வீழ்த்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி CSK அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பா மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.
கடந்த மூன்று போட்டிகளிலும் ருத்ராஜ் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அதனால் இம்முறை விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவர் நினைத்தாலும் 3 பவுண்டர்களை விளாசினார்.
ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் அவரது நம்பிக்கையை உடைத்தார். ருத்ராஜ் 16 ஓட்டங்களில் இருந்தபோது நடராசன் வீசிய பந்து மிடில் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் ருத்ராஜ் வெளியேறினார்.
WATCH - A superb delivery from @Natarajan_91 to outfox Ruturaj Gaikwad and disturb his woodwork ?
— IndianPremierLeague (@IPL) April 9, 2022
?️?️https://t.co/u7JaJQwqfi #TATAIPL #CSKvSRH