ஸ்டெம்பை தெறிக்கவிட்ட நடராஜன்! மீண்டும் பார்முக்கு திரும்பிய யார்க்கர் கிங்.. வைரல் வீடியோ
ஐபிஎல் 15வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வீரர் நடராஜன் அபாரமாக பந்துவீசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 4 மாதமாக காயத்திலிருந்து குணமடைந்து உடல் தகுதியை பெற்ற நடராஜன், மீண்டும் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக திரும்பினார்.
நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவர் விளையாடினார். முதல் பந்தில் பவுண்டரி சென்றாலும் பின்னர் கட்டுக்கோப்பாக பந்துவீசி 6 ரன்கள் மட்டுமே அந்த ஓவரில் விட்டு கொடுத்தார்.
Natarajan cleaned up dangerous Hetmyer with brilliant yorker!! #IPL2022 pic.twitter.com/XBAX9cQjFP
— Ashmin Aryal (@AryalAshmin) March 29, 2022
இருப்பினும் நடராஜனின் 2வது ஓவரில் 13 ரன்கள் விட்டு கொடுத்தார். இதே போன்று நடராஜன் வீசிய 3வது ஓவரிலும் 18 ரன்கள் சென்றது. யாக்கர் கிங் இதனைத் தொடர்ந்து 4வது ஓவரும் நடராஜனுக்கு தரப்பட்டது.
அதில் அவர் தனது உண்மையான திறமையை வெளிப்படுத்தினார். அந்த ஓவரில் நடராஜன் ஹேட்மருக்கு தனது டிரெட் மார்க் யாக்கரை வீச ஸ்டம்புகள் சிதற ஹேட்மர் ஆட்டமிழந்தார்.
இந்த ஓவரில் 4 யாக்கரை வீச, கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தினார். இதனால் நடராஜன் ஃபார்ம்க்கு மீண்டும் திரும்பியுள்ளார்.