இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இந்தியா! அணியில் இடம்பெறாத நிலையில் வெற்றி குறித்து தமிழன் நடராஜனின் பதிவு
இங்கிலாந்து அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வீழ்த்தியது குறித்து நடராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 13ஆம் திகதியில் இருந்து 16ஆம் திகதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்திய அணி வெற்றி குறித்து குறித்து நடராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த போட்டியாக இருந்தது.
திறன், பயன்பாடு மற்றும் ஒட்டுமொத்த அணியின் உணர்வால் வெற்றி கிடைத்தது என பதிவிட்டுள்ளார்.
Outstanding game of Test Cricket - won by skill, application and tremendous team spirit! #TeamIndia pic.twitter.com/3fQwepd9kh
— Natarajan (@Natarajan_91) February 17, 2021