யார்க்கரை தெறிக்கவிட்டு LBW செய்த நடராஜன்! வெளியே போகமாட்டேன் என அடம்பிடித்த பேட்ஸ்மேன்.. வைரல் வீடியோ
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா வீரரை தனது அபார யார்க்கர் பந்தின் மூலம் நடராஜன் எல்பிடபுள்யூ ஆக்கிய நிலையில் DRS பெயரில் சில நிமிடங்கள் மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டது.
ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிய நிலையில் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் ஒரு கட்டத்தில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் பேட்டி ஆடினார். 5 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்த அவருக்கு நடராஜன் பந்துவீசினார். அவர் வீசிய அபாரமான யார்க்கர் பந்து ரிங்குவின் காலில் பட்டது.
— Addicric (@addicric) May 14, 2022
அவுட்டான விரக்தியில் வானத்தை பார்த்து கடவுளிடம் பேசிய கோலி! ரசிகர்கள் மனதை சுக்குநூறாக்கிய வீடியோ
இதையடுத்து எல்பிடபுள்யூ முறையில் அவுட் கேட்டார் நடராஜன். உடனே அவுட் தராத நடுவர் அனில் குமார் சவுத்ரி சில நொடிகள் கழித்தே அவுட் என கையை உயர்த்தினார்.
இதன் பின்னர், ரிங்கு சிங்குடன் மறுபுறம் நின்ற சாம் பில்லிங்ஸ், DRS அப்பீல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரிங்கு மற்றும் சாம் ஆகியோர் பேசிக் கொண்டு நின்றுள்ளார்.
இதனையடுத்து, DRS நேரமான 15 வினாடிகள் முடிந்த நிலையில், ரிங்கு சிங்கை அவுட் என அறிவித்தார் நடுவர். அதாவது, பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் தான் DRS அப்பீல் செய்ய வேண்டும்.
ஆனால், ரிங்கு சிங் அமைதியாக மைதானத்திலேயே நிற்க, DRS கேட்பதற்கான 15 வினாடிகள் முடிந்ததும் அவரை அவுட் எனக் கூறி வெளியேற அறிவுறுத்தினார் நடுவர். இது பற்றி, ரிங்கு நடுவரிடம் சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டார்.
இறுதியாக அதிருப்தியுடன் ரிங்கு பெவிலியனுக்கு நடையை கட்டினார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.