ஐபிஎல் கோப்பையை தட்டிதூக்கிய ஹர்திக் பாண்டியா அணி! உணர்ச்சிவசப்பட்டு அவரை கட்டிபிடித்து நெகிழ்ந்த மனைவி வீடியோ
ஐபிஎல் கோப்பையை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்ற நிலையில் மைதானத்தில் இருந்த அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2022-ன் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிய நிலையில் குஜராத் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை தட்டி சென்றது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணியாக களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி கோப்பையை வென்றது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
— Ashok (@Ashok94540994) May 29, 2022
பிரித்தானியாவில் இலங்கையரை தாக்கி கோமா நிலைக்கு அனுப்பிய நபர்! நடந்தது என்ன? வேதனையில் கதறும் மனைவி
இந்நிலையில் குஜராத் அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷா ஸ்டன்கோவிக் உணர்ச்சிபூர்வமாக காணப்பட்டார்.
கணவரிடம் ஓடி வந்த நடாஷா அவரை கட்டிபிடித்து கொண்டு உணர்ச்சிவசப்பட்டார்.
இதையடுத்து அவரை தட்டி கொடுத்து ஆறுதல்படுத்தினார் ஹர்திக்.
பின்னர் மனைவி கையில் வெற்றி கோப்பையை கொடுத்து மகிழ்ந்தார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.