நாங்கள் விளையாட மட்டும் அங்கு செல்ல மாட்டோம்! உலகக்கோப்பை குறித்து பேசிய இளம் வீரர்
27 வயதான நாதன் பெஞ்சமின் நெதர்லாந்து அணிக்காக 54 போட்டிகளில் விளையாடியுள்ளார்
மான்செஸ்டர் சிட்டி அணி 41 மில்லியன் பவுண்ட்களுக்கு நாதன் பெஞ்சமினை கடந்த 2020ஆம் ஆண்டு வாங்கியது
உலகக்கோப்பை தொடரில் பங்குபெறுவதை விட வெற்றி பெற வேண்டும் என நெதர்லாந்து அணி வீரர் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் வரும் 20ஆம் திகதி உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்குகிறது. நவம்பர் 21ஆம் திகதி நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து-செனெகல் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடர் குறித்து நெதர்லாந்து அணியின் இளம் வீரர் நாதன் பெஞ்சமின் ஏகே கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
'போட்டி குறித்த எதிர்பார்ப்புகள் பற்றி எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் நீங்கள் ஒரு தொடரில் போட்டியிட்டால், அதில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். அதுவே முக்கிய நோக்கம் ஆகும். நாங்கள் விளையாட மட்டும் அங்கு செல்ல மாட்டோம். நாங்கள் போட்டியிடுவதுடன் வெற்றி பெற வேண்டும்.
முதல் ஆட்டத்தில் வெற்றி பெற முடிந்தால், நாங்கள் எப்படி விளையாடலாம், எதை மேம்படுத்தலாம் என்பதை மதிப்பீடு செய்து போட்டிக்கு முன்னேறலாம். எங்களிடம் ஒரு நல்ல இளம் அணி உள்ளது, அனைவரும் சிறிது காலம் ஒன்றாக விளையாடி, ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ள அதுவும் உதவும்' என தெரிவித்துள்ளார்.
மேலும் தமது அணியின் பயிற்சியாளர் குறித்து அவர் கூறும்போது, என்ன செய்ய வேண்டும் என்பதிலும், எப்படி விளையாட வேண்டும் என்பதிலும் எங்கள் பயிற்சியாளர் தெளிவாக இருக்கிறார். அவர் நுட்பான விவரமறிந்தவர்.
ஒவ்வொரு வீரருக்கும் அவரது பங்கு சரியாகத் தெரியும், அது எங்களுக்கு அணியில் நிறைய தெளிவையும், ஆறுதலையும் கொண்டு வந்தது. அதிலிருந்து நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
Getty