ஜாம்பவானை பின்னுக்குத்தள்ளி சாதனை படைத்த வீரர்! முதலிடத்தில் முத்தையா முரளிதரன்
அவுஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஏழாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
நியூசிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.
இந்த தொடரின் முதல் போட்டியில் நாதன் லயன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். இத்துடன் ஒட்டுமொத்தமாக 521 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் 8-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
அஸ்வினை பொறுத்தவரை அவர் 507 விக்கெட்கள் வீழ்த்தி 9-ம் இடத்தில் இருக்கிறார்.
நாதன் லயன், அஸ்வின் என இருவருமே சமீபத்தில் தான் 500 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கின்றன.
இந்நிலையில் அடுத்து 600 விக்கெட்களை யார் முதலில் கைப்பற்றப் போவது என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு இந்திய அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளதால் அஸ்வின் விரைவில் 600 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்ட வாய்ப்பு உள்ளது.
With four wickets in the first innings, Nathan Lyon overtook Courtney Walsh to become the seventh-highest leading wicket-taker in Test history ???#Cricket #NZvAUS #NathanLyon pic.twitter.com/q29wGIiFkr
— Sportskeeda (@Sportskeeda) March 1, 2024
அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்
- முத்தையா முரளிதரன்- 800
- ஷேன் வார்னே- 708
- ஜேம்ஸ் ஆண்டர்சன்- 698
- அனில் கும்ப்ளே- 619
- ஸ்டூவர்ட் பிராட்- 604
- கிளென் மெக்ராத்- 563
- நாதன் லயன்- 521
- கொட்னி வால்ஷ்- 519
- ரவிச்சந்திரன் அஸ்வின்- 507
- டேல் ஸ்டெய்ன்- 439
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |