சாதனையில் அஸ்வினை முந்திய அவுஸ்திரேலிய வீரர்! எட்டா உயரத்தில் இலங்கை ஜாம்பவான்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நாதன் லயன் தமிழக வீரர் அஸ்வினை முந்தினார்.
நாதன் லயன்
இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் (Nathan Lyon) 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன்மூலம் அவரது டெஸ்ட் விக்கெட்டுகள் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்தது. மேலும் தமிழக வீரர் அஸ்வினை முந்தி (537) 7வது இடத்தை லயன் பிடித்தார்.
முதலிடத்தில் முரளிதரன்
அஸ்வின் 106 டெஸ்ட்களில் 537 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், லயன் 133 டெஸ்ட்களில் 538 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan) 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஷேர்ன் வார்னே (அவுஸ்திரேலியா) 708 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) 704 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |