அயர்லாந்தை மொத்தமாக முடித்த நேதன் ஸ்மித்: கடைசிவரை போராடிய வீரர்
நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்டில் அயர்லாந்து அணி 179 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
490 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்
அயர்லாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பெல்ஃபாஸ்டில் நடந்து வருகிறது.

நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 490 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக டாம் ப்ளெண்டல் 186 ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா 121 ஓட்டங்களும் எடுத்தனர். மார்க் அடைர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அச்சுறுத்தலான பந்துவீச்சு
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய அயர்லாந்து அணி, நேதன் ஸ்மித்தின் அச்சுறுத்தலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து.
38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என தடுமாறிய அணியை ஆன்டி மெக்பிரைன் மற்றும் மார்க் அடைர் கூட்டணி மீட்டது.
மார்க் அடைர் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நேதன் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மெக்பிரைன் அரைசதம் அடித்தார்.
எனினும் ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, அயர்லாந்து அணி 179 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஆன்டி மெக்பிரைன் 73 ஓட்டங்களும் களத்தில் நின்றார். நேதன் ஸ்மித் 6 விக்கெட்டுகளும், பென் சியர்ஸ் 2 விக்கெட்டுகளும், ஃபௌக்ஸ் மற்றும் திக்னர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து 311 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி அயர்லாந்து அணி ஆடி வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |