இன்று ஒருநாள் இருட்டில் இருப்பீர்களா? பிரித்தானிய மின் துறை ஊக்கத்தொகை அளிக்கிறது: யார் யாருக்கு தகுதி
பிரித்தானியாவில் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் எந்த மின் சாதனங்களையும் பயன்படுத்தாமல் இன்று ஒருநாள் இருட்டில் இருந்தால் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக மின் துறை அறிவித்துள்ளது.
மின் பற்றாக்குறை நிலை
குறித்த தகவலை ESO நிர்வாகம் தெரிவித்துள்ளதுடன், நிலக்கரியால் உற்பாதிக்கப்படும் மின் விநியோகத்தை இன்று ஒருநாள் கண்காணிப்பு நிலையில் வைத்திருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

@AFP
இருப்பினும், மக்கள் கவலைப்பட தேவை இல்லை எனவும், பிரித்தானியாவில் தற்போது மின் பற்றாக்குறை நிலை ஏற்படவில்லை எனவும் ESO நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இந்த முயற்சியானது அதிகமானோர் எரிசக்தியை பயன்படுத்தும் நேரத்தில், பயன்பாட்டை குறைக்க உதவும் நடவடிக்கை என கூறுகின்றனர். மட்டுமின்றி, இந்த குளிர்காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கை இதுவெனவும் கூறியுள்ளனர்.
மின் பயன்பாட்டை தவிர்த்தால்
இன்று ஒருநாள் பிரித்தானிய குடும்பங்கள் மின் பயன்பாட்டை மொத்தமாக தவிர்த்தால் அதற்கான கட்டணத்தை செலுத்தவும் அந்தந்த மின் விநியோக நிறுவனக்கள் முடிவு செய்துள்ளனர்.

@getty
ஆனால், இந்த திட்டத்தில் பங்கேற்க மக்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களை தொடர்புகொண்டு அந்த நிறுவனங்கள் மின் பயன்பாட்டை மொத்தமாக தவிர்க்கும் திட்டத்தில் கலந்து கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்யும்.
இன்றிரவு அவ்வாறான ஒரு புது முயற்சி முன்னெடுக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு kilowatt hour மின்சார சேமிப்புக்கும் 6 பவுண்டுகள் வரையில் ஊக்கத்தொகை அளிக்க உள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        