பிரித்தானியாவில் 1.7 மில்லியன் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி
பிரித்தானியாவில், பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணி நேரத்துக்கு 1.02 பவுண்டுகள் அதிகரிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சேன்சலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரித்தானிய சேன்சலரான ஜெரமி ஹண்ட், குறைந்த ஊதிய ஆணையத்தின் பரிந்துரையின்படி, குறைந்தபட்ச ஊதியத்தை 10.42 பவுண்டுகளிலிருந்து 11.44 பவுண்டுகளாக உயர்த்துவதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அடுத்த ஏப்ரலில், அனைத்து முழு நேரப் பணியாளர்களும் ஆண்டொன்றிற்கு 1,800 பவுண்டுகளுக்கும் அதிகமான ஊதிய உயர்வைப் பெறுவார்கள் என்று கூறியுள்ளார் அவர்.
1.7 மில்லியன் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி
இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வால் பிரித்தானியா முழுவதிலும், 1.7 மில்லியன் பணியாளர்கள் பலனடைய இருக்கிறார்கள்.
Sky News
அத்துடன், இந்த ஊதிய உயர்வு நேரடியாக ஏராளமானோருக்கு பலனளிப்பதுமின்றி, மேலும் பலருடைய ஊதியங்கள் மறைமுகமாக அதிகரிப்பதைக் காணலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |