தேசிய லொட்டரியில் ரூ 36 கோடி பரிசை இதுவரை கைப்பற்றாத வெற்றியாளர்கள்: மொத்தமாக இழக்க நேரிடும்
தேசிய லொட்டரியில் 6 வெற்றியாளர்கள் தங்கள் தொகையை இதுவரை கைப்பற்ற முன்வரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறவிடும் வெற்றியாளர்கள்
உரிய திகதிக்குள் தொகை கைப்பற்றப்படவில்லை எனில், மொத்தமாக இழக்க நேரிடும் என்றும் நிர்வாகிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குலுக்கல் நடத்தப்பட்டதன் 180 நாட்களுக்குள் வெற்றியாளர்கள் தங்கள் பரிசை கைப்பற்ற வேண்டும்.
ஆனால் இந்த 6 மாத காத்திருப்பு நாட்களைத் தவறவிடும் வெற்றியாளர்களின் பரிசானது ஒட்டுமொத்த பிரித்தானியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
3.4 மில்லியன் பவுண்டுகள்
இதில் ஒருவர் அடுத்த 3 மாதங்களில் உரிமை கோரவில்லை என்றால், பணத்தை இழக்க நேரிடும் என தேசிய லொட்டரி அறிவித்துள்ளது. இந்த 6 வெற்றியாளர்களின் உரிமைக் கோரப்படாத மொத்த தொகையானது 3.4 மில்லியன் பவுண்டுகள் அல்லது இந்திய மதிப்பில் ரூ 36 கோடி என்றே கூறப்படுகிறது.
இதில் உரிமைக் கோரப்படாத 30 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 பவுண்டுகள் என பரிசை அள்ளிய ஒருவரின் தொகை உட்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |