NSCயில் முதலீடு செய்தால் வருமான வரி விலக்குடன் லாபம்! 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Reserve Bank of India
By Sivaraj Jun 03, 2025 10:40 AM GMT
Report

அஞ்சல் சேமிப்பு திட்டமான NSCயில் முதலீடு செய்தால், வட்டியுடன் சேர்த்து 5 ஆண்டுகள் இறுதியில் எவ்வளவு பெறலாம் என்பது குறித்து இங்கே காணலாம். 

சிறந்த முதலீட்டு வாய்ப்பு 

தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) என்பது குறைந்தபட்ச அபாயத்துடன் கூடிய சிறந்த முதலீட்டு வாய்ப்பு ஆகும்.

ஏனென்றால், இந்த திட்டத்தில் வருமான வரிச் சட்ட பிரிவு 80 Cயின் கீழ் வருமான வரி விலக்கும் வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் அதிகம் முதலீடு செய்யும் இடங்களில் ஒன்றாக அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் National Saving Certificate என்ற திட்டத்தை ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ எளிதாக திறக்கலாம்.

சிறிய மற்றும் நடுத்தர வருவாய் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைப்பது இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது. 

பொது வருங்கால வைப்பு மற்றும் தபால் அலுவலக நீண்ட கால வைப்பு நிதிகள் போன்ற சில நிலையான வருமான கருவிகளைப் போல, தேசிய சேமிப்பு சான்றிதழ், உத்தரவாதமான வட்டி மற்றும் முழுமையான மூலதன பாதுகாப்பை வழங்குகிறது. 

National Savings Certificate invest and return 

இருப்பினும் வரி சேமிப்பு, பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்புகள் போல், பணவீக்கத்தை மீறிய வருமானத்தை தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தால் வழங்க முடியாது.

முன்னதாக, அச்சிடப்பட்ட ஒரு பத்திரமாக, NSC சான்றிதழ்களை தபால் அலுவலகங்கள் வழங்கி வந்தன. இந்த நடைமுறையானது 2016ஆம் ஆண்டு முதல் மாற்றப்பட்டது. 

சிறு தொகையை சேமிக்க

ஒருவரிடம், வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு இருக்கும் பட்சத்தில், இணைய வங்கியை பயன்படுத்தும் நடைமுறை மூலமாக, தேசிய சேமிப்பு சான்றிதழை, இணையம் மூலம் மின்னணு முறையில் வாங்கலாம்.

இது ஒருவர் தன்னுடைய பெயரிலோ அல்லது தன்னுடைய குழந்தைகள் பெயரிலோ வாங்க முடியும். சிறு தொகையை சேமிக்க நினைப்போருக்கு இத்திட்டம் கைகொடுக்கும். இந்த திட்டத்தில் நிலையான ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.

இது தற்போது ஆண்டுக்கு 7.7 சதவிதம் என்ற நிலையில் உள்ளது. ஆனாலும், இது மாற்றத்திற்கு உரியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வருமான வரிச் சட்ட பிரிவு 80 Cயின் கீழ் ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும். 

National Savings Certificate invest and return

இதில் ஆண்டுக்கு 1.5 லட்சம் முதலீடு செய்யப்படும் நிலையில், அதனை 80 Cயின் கீழ் கணக்கு காண்பித்து வருமான வரி சலுகையை பெற முடியும். 

குறைந்தபட்சம் 100 ரூபாய்  

குறைந்தபட்சம் 100 ரூபாய் தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

NSC சான்றிதழ்களை வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பெறப்படும் பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கான பிணையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இந்த திட்டம் கூட்டு வட்டி என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இதில் சம்பாதித்த வட்டி ஆண்டு தோறும் மறு முதலீடு செய்யப்பட்டு, முதிர்வு காலத்தில் ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படும்.

NSC மூலம் கிடைக்கும் பணத்திற்கு டிடிஎஸ் இல்லாததால், சந்தாதாரர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது, அதற்கு பொருந்தும் வரியை செலுத்த வேண்டும்.  

நிதி விவரங்கள்

வட்டி வீதம் ஆண்டுக்கு 7.7 சதவிதம், காலாவதி 5 ஆண்டுகள், வரி விலக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை, அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. NSCஐ வங்கியில் அடமானமாக வைத்துப் பணம் பெறலாம்.  

ரூ 5 லட்சம் முதலீடு செய்தால் என்ன கிடைக்கும்? 

இந்த திட்டம் மூலம் ரூ.5,00,000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு 7.7 சதவித வட்டி விகிதத்துடன், 5 ஆண்டுகள் முடிவில் ரூ.7,24,513 பெறலாம். (இலாபம் ரூ.2,24,513) 

ஏன் தேர்வு செய்யலாம்?

அரசின் முழுமையான நிதி பாதுகாப்பு இருப்பதால் சந்தை அபாயம் இல்லை. இதில் பங்குச் சந்தை ஏற்றத்தாழ்வுகள், நஷ்டங்கள் போன்றவை இல்லை. கடன் தேவைகளுக்கு உதவும், வங்கிகளில் அடமானம் வைத்துப் பணம் பெறலாம். 

எங்கே பெறலாம்?

அஞ்சல் அலுவலகங்கள் (Post Office), India Post website அல்லது இணையதளம் வழியாக பெறலாம். மத்திய அரசு அங்கீகரித்த ஒன்லைன் நிதி சேவைகள் மூலமாகவும் பெறலாம். 

National Savings Certificate invest and return 

National Savings Certificate invest and return 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US