டெபிட் கார்டுகள் தொடர்பில் பிரித்தானிய வாடிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி
பிரித்தானியாவில் இம்மாத இறுதியில் காலாவதியாகும் டெபிட் கார்டுகளுக்கு பதிலாக புதிய கார்டுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், பழைய கார்டுகளை வீசிவிடவேண்டாம் என சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
NATIONWIDE என்னும் நிதி நிறுவனம், இம்மாதம் தங்கள் டெபிட் கார்டு காலாவதியாகும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய டெபிட் கார்டுகளை அனுப்பி வைத்துள்ளது.
ஆனால், அந்த அட்டையில் ஒரு பிரச்சினை உள்ளது தெரியவந்துள்ளதாகவும், அதனால் அதைப் பயன்படுத்த முடியாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த டெபிட் கார்டுகளிலுள்ள பிரச்சினைகள் சரியாகும் வரை பழைய கார்டுகளை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ள NATIONWIDE நிறுவனம், ஆகவே, பழைய கார்டுகளை வீசி எறிந்துவிடவேண்டாம் என்று வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அப்படி யாராவது தங்கள் பழைய கார்டை தூக்கி எறிந்திருந்தால், அருகிலுள்ள நிறுவனக் கிளையை அணுகினால், அவர்கள் புதிய கார்டின் பிரச்சினையை சரி செய்து தருவார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.