என் தாய்மாமனை இழந்து விட்டேன்! பிரபல நடிகர் உருக்கம்
பிரபல நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி தன் தாய்மாமனை இழந்துவிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
'சதுரங்க வேட்டை', 'நம்ம வீட்டு பிள்ளை', 'கர்ணன்' போன்ற படங்களில் நடித்திருப்பவர் நட்டி.
தற்போது மோகன்.ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' படத்தில் நட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் எச்சரிக்கை பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் நட்டி எழுதியுள்ளார். ஷ
அதில், ''டைல்ஸ், இது முதியோர்களின் எதிரி, சமீபத்தில் எனது தாய்மாமனை இழந்துவிட்டேன். காரணம் குளித்துவிட்டு வந்த உடன் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். நம்முடைய கௌரவம் டைல்ஸில் இல்லை. நம் முதியோர்களை காப்பதில் இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tiles.. இது முதியோர்களின் எதிரி.. சமீபத்தில் எனது தாய் மாமனை இழந்து விட்டேன்.. காரணம் குளித்துவிட்டு வந்த உடன் கால் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிர் இழந்தார்..நம்முடய கௌரவம் tiles ல் இல்லை.நம் முதியோர்களை காப்பதில் இருப்பது..??
— N.Nataraja Subramani (@natty_nataraj) August 29, 2022