இனிமேல் சோப் எதற்கு! இந்த இயற்கையான பொடி இருக்கு!
Skin Care
By Mystica
- நம் உடலை சுத்தமாகவும் மற்றும் நறுமணமிக்கதாகவும் வைத்துக்கொள்ள நாம் அனைவரும் ஆசைப்படுவோம்.
- அதுவே அது இயற்கையாகவும் இருந்தால் இன்னும் சூப்பர்!
- முன்னைய காலத்தில் எல்லாம் இவ்வாறான சோப்கள் இருக்கவில்லை .
- ஆகவே இவ்வாறான இயற்கையான பொடிகளையே அதிகம் பயன்படுத்தினார்கள்.
- அது சருமத்திற்கு நன்மையளிப்பதோடு உங்கள் சருமத்தை இயற்கை பொலிவோடு மாற்றிவிடுகிறது.
- இந்த சரும நன்மையளிக்கும் இயற்கை பொடியை தினமும் போட்டு குளித்தால் சருமம் நீண்ட நேரம் நறுமணத்தோடும் பொலிவோடும் இருக்கும்.
இது தயாரிக்க தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 10g
- டீஸ்பூன் பாசிபயறு மாவு - 10g
- டீஸ்பூன் சந்தனபொடி - 10g
- டீஸ்பூன் ரோஜா இதழ் - 5g
- டீஸ்பூன் மஞ்சள் தூள் -5g'
- டீஸ்பூன் (கஸ்தூரி மஞ்சள்) துளசி பொடி - 2g
- டீஸ்பூன் வேப்பிலை பொடி - 2 g
- ஒரு கண்ணாடி போத்தல்
இதில் ஏதெனும் ஒன்று உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துமெனின் அதனை முன்கூட்டியே தவிர்த்துவிடுங்கள்.
இவை அனைத்தையும் ஒரு கண்ணாடி போத்தலில் போட்டு நீர் படாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இது இலகுவில் கெட்டுப்போகாது.
இதனை 3 மாதங்கள் வரை உங்களுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
தினமும் குளிக்கும்போது உங்களுக்கு தேவையான அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் குறிப்பு
- இது அனைத்து சரும வகைக்கும் உகந்தது.
- உங்களுக்கு வறண்ட சருமம் இருப்பின் பாலோடு சேர்த்து உடலில் தேவையான பாகங்களுக்கு பூசிக்கொள்ளலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US